#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி.. சென்னையில் இன்று 27 விமானங்கள் ரத்து.!  - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

புயல் காரணமாக சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளான மாதவரம், ஆவடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது.

இதில், மாண்டஸ் புயல் காரணமாக நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, ஷீரடி மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் என 8 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், இன்றும் சென்னையிலிருந்து கொச்சி, கோழிக்கோடு, ஹைதராபாத் என மொத்தம் 27 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையிலிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் 6 வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 flights cancelled due to mandus storm in Chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->