விராட் கோலியின் முடிவால்,, இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லாத 3 வீரர்கள்.? - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் விராட் கோலி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். விராட் கோலி இந்த திடீர் முடிவால் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழும் விராட் கோலி, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வீரர் ஒருசிலர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்டு, அணியில் இடம்பெற்ற மூன்று வீரர்கள், விராட் கோலி இந்த முடிவுக்குப் பின் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சிறந்த வீரராக அஜிங்கியா ரகானே களமிறக்கப்படுவர்.  இந்திய அணியில் விராட் கோலி இல்லாதபோது, இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி பல போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார். ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரகானே நியமிக்க வேண்டும் என பேசும் அளவிற்கு, அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் சிறப்பாக செயல்படவில்லை. கேப்டனாக இந்திய அணியை வெற்றி பெற செய்த ரகானே, ஒரு வீரராக இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்களை அடிக்கவில்லை. விராட் கோலி கேப்டனாக இருந்ததால் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் மீண்டும் ரகானேவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால்,  ரகானே இந்திய அணியில் இடம் பெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. 

அதே போல, இந்திய அணியின் விராட் கோலியால் அதிகம் நம்பப்பட்டு, பலமுறை களமிறக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் புஜாரா, தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை பல முறை வெற்றி பெற செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது புஜாராவும், விராட் கோலியின் முடிவால், இந்திய அணியில் இடம் பிடிப்பது கடினம் என கூறப்படுகிறது. 

அதேபோல இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக அணியில் அவ்வப்போது மட்டுமே இடம் பெற்று வருகிறார். விராட் கோலி ஒய்வு அறிவித்துள்ளதால், அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து புறக்கணிக்கப் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 indian players whose test careers may be end


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->