டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரபாடா! என்ன சாதனை தெரியுமா?
300 wickets in low balls Rabada historic record in Test cricket
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, வங்கதேசத்தின் எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 300-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முக்கியமான சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
ரபாடா, இந்த மைல்கல்லை அடைந்த 6-வது தென் ஆப்பிரிக்க வீரராகவும், மிகவும் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். அவர் 11817 பந்துகளில் இந்த சாதனையை எட்டியுள்ளார், இது வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடமாகும்.
இதற்கு முன்னர், டேல் ஸ்டெய்ன், ஷான் பொல்லாக், மக்காயாந்தினி, ஆலன் டொனால்ட், மோர்னே மோர்கல் ஆகிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 300+ விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்.
இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும், மேலும் ரபாடாவின் தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சு அவரை உலக அளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உயர்த்தியுள்ளது.
English Summary
300 wickets in low balls Rabada historic record in Test cricket