3-வது டெஸ்ட் போட்டி.. 2வது நாள் ஆட்டம் துவக்கம்..வழிவிடுவாரா வருணபகவான்.!   - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா, இந்திய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டது.

அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விடாமல் தொடர்ந்து பெய்தது. இதனால், முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்தநிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது . நேற்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே இன்று ஆட்டம் தொடங்கி உள்ளது.

முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 15 ஓவர்களுக்கு கீழ் வீசப்பட்டதால் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

  3rd Test Day 2 of the game begins Will Varuna give way


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->