இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி  கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, கேப்டன் பட்லர் 68 ரன்கள் எடுத்திருந்தார். அணியில் வேற யாரும் சோபிக்கவில்லை. இதனால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அத்துடன், அர்ஷ்தீப் சிங், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 02 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிரடி காட்டியது. சஞ்சு சாம்சன் 26 ரன்கள் குவித்தார். மறு முனையில் அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 12.5 ஓவர்களில் 07 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்முலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhishek Sharma showed action in the first T20 cricket match against England


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->