அப்போ விட்டுட்டோம்.. இப்ப புடிச்சிட்டோம்...ஆஸ்திரேலியாவை பழி தீர்த்த ஆப்கனிஸ்தான்! - Seithipunal
Seithipunal


அப்போ விட்டுட்டோம்.. இப்ப புடிச்சிட்டோம்...ஆஸ்திரேலியாவை பழி தீர்த்த ஆப்கனிஸ்தான்!
கருணை காட்டுமா இந்தியா?

இன்றுகாலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி   உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சி தோல்வியடைய செய்துள்ளது.  

ஒரு சின்ன ரிவைண்ட் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் முதலில் விளையாட்டிய ஆப்கான் 293   ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 91 ரங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்தது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடி மேக்ஸ் வெல் 128 பந்துகளில்  201  ரன்களை எடுத்து ஆசி அணியை வெற்றிபெற செய்திருப்பார், இந்த போட்டி கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு சிறந்ததாக  கருதப்படுகிறது.

இந்நிலையில், டி- 2௦ உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8  சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,  ஆஸ்திரேலியா  - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இன்று காலை நடைபெற்றது.  முதலில் பேட் செய்த ஆபிகானிஸ்தான் அணி 148 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை கண்டு அச்சப்படாமல் தேவையான நேரங்களில் பவுடரிகளையும், சிக்ஸர்களையும் விரட்டினர். இருவரும் அரைசத்தத்தை கடந்து . குர்பாஸ் 60  ரன்களிலும், இப்ராஹிம் 51  ரன்கள் ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் காட்டிய அதிரடியால் ஒருகட்டத்தில் அணியின் ஸ்கோர் 200  ரன்களை தொடும் என்றே தோன்றியது. ஆனால் பின்கள ஆட்டக்காரகளின் சொதப்பலால் 148  ரங்களையே ஆப்கனிஸ்தானால் எடுக்க முடிந்தது.  

இரண்டாவதாக ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலேயே பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான்   பவுலர்கள்  பல்வேறு வேரியேஷன்களை பந்துகளில்  காட்டி திணறடித்தனர்.   எப்போதும் அதிரடியான தொடக்கம் தரும் ஹெட் இந்த போட்டியில் நவீன் பந்தில் டக் ஆனார். எதிர்முனையில் இருந்த வார்னரும் மூன்றே ரன்கள் எடுத்து  ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியை  கொடுத்தார். ஆனால் ஆபிகானிஸ்தான் என்றால் மேக்ஸ் வெல்லுக்கு சொல்லவா வேண்டும், பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

குல்பாதின் பந்தில் அவர்கொடுத்த கேட்சை நூர் அருமையாக பிடித்து அவரை வெளியேற்றினார். பின்னர் வந்த ஸ்டோனிஸ், டேவிட், வாடு போன்றவர்கள் அடுத்தது வேகத்தை  எதிர்கொள்ள முடியாமலும், சூழலில் சிக்கிக்கொண்டும் அடுத்தது வெளியேறினார்கள். இதனால் ஆஸ்திரேலியா 19 ஓவரில் 127 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் சென்ற வருடம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்கு  ஆப் கானிஸ்தான் இந்த போட்டியில் பழி தீர்த்துள்ளது. இந்நிலையில் அடுத்து இந்தியாவுடனான போட்டியில் ஆசுதிரேலியா  வெற்றிபெற்றே   ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா இந்தியாவுடன் தோல்வியுற்று, அபிகானிஸ்தான் வங்கதேச அணியை வென்றால்  ரன் ரேட் அடிப்படியிலேயே அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் . ஆத்திரேலியாவின் உலகக்கோப்பை கனவு இந்தியாவின் கையில்தான் இப்போது உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan vs Australia match Afghanistan won the match


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->