அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில், பெலாரஸ் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு  முன்னேறியுள்ளார். 


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம்  இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க நாட்டை சேர்ந்த  எம்மா நவரோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-3, 7-6 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதற்கிடையே காலிறுதிக்கு போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில், சபலென்கா, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்சுடன்  மோதி, 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில், எலிஸ் மெர்டென்சுவை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Open Tennis Arina Sabalenka in the final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->