விளையாட்டு வீரர் தேர்வு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மத்திய அரசு முடிவு..!
An end to the controversy over the selection of athletes Central government decision
விளையாட்டு வீரர்கள் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கு, மத்திய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகளில் வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படும்.
அனைத்து தேர்வுச் சோதனைகளும் வீடியோ கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் என்றும், இந்த முயற்சிகளால் விளையாட்டு வீரத் தேர்வுகளில் யாரும் குறை சொல்ல முடியாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கிச் சூடு மற்றும் மல்யுத்தம் போன்ற முக்கிய விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்கு முன், தெளிவற்ற கொள்கைகள் குறித்து புகார் அளித்த பிறகு நீதிமன்றங்களை நாடினர்.
இதன் காரணமாக, இனி வீரர் தேர்வுச் சோதனைகளில் பார்வையாளர்களும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தேர்வுகளில் போது விளையாட்டு அமைச்சகம் மற்றும் விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, விளையாட்டு வீரர்களின் தேர்வின் முடிவு தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். கூட்டமைப்புகள் தன்னாட்சி என்ற பெயரில் எதையும் செய்ய முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
An end to the controversy over the selection of athletes Central government decision