பாதாளத்தில் இருந்து மீளுமா இலங்கை? அனுபவமிக்க ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் சேர்ப்பு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 புள்ளிகளை பெற்ற இலங்கை அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 10ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்த இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட வில்லை. 

இந்நிலையில் இலங்கை அணியின் இருந்து மதிஷாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இலங்கை அணியில் நட்சத்திர ஆள் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த ஏஞ்சிலோ மேத்யூஸ் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் பலம் அளிக்கும் என நம்பப்படுகிறது. இளம் வீரர்களை கொண்டு விளையாடி வரும் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அனுபவமிக்க ஒரு மூத்த வீரர் சேர்த்து இருப்பது இலங்கை அணிக்கு பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Angelo Mathews replaced matheesha pathirana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->