பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்! - Seithipunal
Seithipunal


பாரிஸ் பாராலிம்பிக்: இந்திய வீரர் ஹோகடோ குண்டு எறிதலில் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

இதன் மூலம் 27 பதக்கங்கள் பெற்று பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியா பதக்க பட்டியலில் 17-வது இடம்பிடித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 4,400 வீரர், வீராங்கனைகள் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்றுள்ளனர். 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி இந்தியா சார்பில் பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது. 

இந்த நிலையில், நேற்று இரவு ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்.57 போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்  இந்தியா அணி வீரர் ஹோகடோ செமா.

இப்போட்டியில் ஈரான் வீரர் யாசின் கோஸ்ரவி (15.96 மீ) முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.இரண்டாமிடம் பெற்று பிரேசில் வீரர் தியாகோ பாலினோ டோஸ் சாண்டோஸ் (15.06 மீ) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்..

இதனால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியா 6 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 17 இடத்தை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another medal for India at Paris Paralympics


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->