அஸ்வினுக்கு வாய்ப்பு மறுப்பு.. இறுதிப் போட்டியில் இடம்பெறாதது ஏன்..? ரோகித் ஷர்மா விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


உலகின் முதல் டெஸ்ட் அணியான இந்தியா இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

உலகின் டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில் 869 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாதது டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய இந்தியனின் கேப்டன் ரோகித் ஷர்மா "நாங்கள் பந்துவீசப் போகிறோம். சூழ்நிலைகள் மற்றும் வானிலை மேகமூட்டமாக உள்ளது. ஆடுகளம் பெரிதாக மாறாது. நான்கு வேகத்தந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திரன் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளோம். ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்வது எப்போதும் கடினமானது. அவர் போட்டி வெற்றியாளர். ரஹானே டெஸ்ட் போட்டியில் நிறைய அனுபவங்களை கொண்டுள்ளார்" என டாஸ் வென்ற பிறகு ரோகித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

WTC 2023 இறுதிப் போட்டிக்கான இந்தியா அணி: ரோஹித் ஷர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத்(விக்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwin denied chance in World Championship Test final


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->