உலகின் நம்பர் 1, நம்பர் 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்திய அஸ்வின்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.  

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இதில், 23 ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மார்னஸ் லாபுசக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருடைய விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashwin get wicket Steve Smith and marnus labuschange in single over


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->