INDvsNEP | 23 ஓவர் தான்! இந்தியாவுக்கு புதிய வெற்றி இலக்கு! மழையால் நடந்த மாற்றம்! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2023 தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் ஆடி வருகின்றது. 

இந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, களமிறங்கிய நேபாளம் அணியின் துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் குஷால் புர்டெல் 38 ரன்னுக்கும், ஆசிப் ஷேக் 58 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா சொற்ப ரங்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை சேர்த்தது. 

இதனையடுத்து இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

2.1 ஓவர்களில் மழை குறிக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 23 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டு, 145 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதுவரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 11.2 ஓவர்களுக்கு 77 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup 2023 India Nepal 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->