இந்திய அணியின் பலமே இப்போது பலவினமாக மாறியுள்ளது - ஆதங்கத்தை கொட்டிய முன்னாள் வீரர்! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை முதலில் சரி செய்ய வேண்டும் என்று, முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஜியோ சினிமா தளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "இந்திய அணியின் பெரிய பலமே டாப் ஆர்டர்தான். இருப்பினும் வீரர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.

கடந்த சில வருடங்களாக நான் பார்த்த வரை முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவின் டாப் ஆர்டர் சொதப்புகின்றது. குறிப்பாக ஐசிசி தொடர்களில் அது வெட்ட வெளிச்சம். 

எனவே, இந்திய அணி இதனை பாடமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றியை நிலைநாட்ட வேண்டுமென்றால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும். 

தொடர்ச்சியாக இவர்கள் ஸ்கோர் எடுக்கும் முனைப்பில் ஈடுபட வேண்டும். ஏதோ இரு ஆட்டங்களில் சிறப்பாகவும், மற்ற அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பினால் சரிவராது.

ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முதல் 4 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஷுப்மன் கில்லுக்கு சிறந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும்.

ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கடைசி வரை நின்று ஆட வேண்டும்" என்று அந்த பேட்டியில் சாபா கரீம் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup And World cup 2023 team India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->