பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்! இந்தியாவின் தங்கப்பதக்க கனவும் பறிபோகும் அபாயம்! - Seithipunal
Seithipunal


சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கிரிக்கெட் தொடரின் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது.

தற்போது உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஆசிய போட்டிகளுக்கு மிக மிக இளம் வீரர்களை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட அணிகள் களம் இறக்கி உள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி மட்டும் வலிமையான வீரர்களுடன் களமிறங்கி உள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி, தங்க பதக்கத்தை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் நுழைந்து உள்ளது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிதான் வெற்றி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் சொன்னது போலவே, ஆப்கானிஸ்தான் அணி அபாரமான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து, 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதனை அடுத்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில், 6 விக்கெட்களை இழந்து, 116 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது.

மற்ற அணிகளை காட்டிலும் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்களை ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்படின் நைப் தற்போதைய இந்த அணியையும் கேப்டனாக வழிநடத்தி உள்ளார்.

மேலும் விக்கெட் கீப்பராக முகமது சசாத் இருப்பது ஆப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் வலுவை சேர்த்துள்ளது.

மேலும், அப்சர் சசாய், நூர் அலி சட்ரன், கரீம் ஜனத் ஆகிய மூன்று வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் வாய்ந்த வீரர்களாக திகழ்கின்றனர். 

மொத்தமாக ஆடும் 11 பேரில், ஆப்கானிஸ்தான் அணியின் ஐந்து வீரர்கள் நல்ல அனுபவமும் வாய்ந்த வீரர்களாக இருப்பதால், இறுதிப் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நிச்சயம் தங்க பதக்கத்தை வெல்லும் என்ற இந்திய ரசிகர்களின் கனவு பலிக்குமா? வலிமை வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்துடன் இந்திய வீரர்கள் நாடு திரும்புவார்களா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதற்கிடையே ஆசிய போட்டிகளில் இந்தியா முதல்முறையாக 100 பதக்கங்களை வெல்வது உறுதியாகியுள்ளது.

தற்போது வரை 91 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா, வில்வத்தை, கபடி, கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் 9 பக்கங்களை உறுதி செய்துள்ளதால், 100 பதக்கங்களை இந்த ஆசிய போட்டிகளில் வெல்வது உறுதியாக உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா 70 பதக்கங்களை வென்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த முறை 100 பதக்கங்களை வெல்லப்போவது உறுதியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asian Games 2023 pak vs afg


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->