இன்று இந்தியா - ஆசி மோதல்! இந்தியாவே நிச்சயம் வெல்லும் - பிரபல ஜோதிடரின் கணிப்பு!  - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  இந்த ஆட்டத்தில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என பிரபல ஜோதிடர் ஒருவர் தனது கணிப்பினை வெளியிட்டு இருக்கிறார். 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 75 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா  வெற்றி பெற 25% மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருத்திக்கிறார். 

அதுவும் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால், இந்திய நிச்சயமாக வெற்றி பெரும் எனவும், இரண்டாவது பேட்டிங் செய்தால் கொஞ்சம் கடினப்பட்டு வெற்றி பெற வேண்டி இருக்கும் எனவும் அவர் தனது கணிப்பினை தெரிவித்து இருக்கிறார். 

மேலும் இந்திய அணியில் கேஎல் ராகுல் விராட் கோலி ரோஹித் சர்மா சிராஜ் அஸ்வின் ஆட்டம் சிறப்பாக இருக்கலாம் எனவும், ஜடேஜா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார் எனவும் தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மாரன்ஸ் லபூஷனே மிகச் சிறப்பாக விளையாடுவார் எனவும்,  ஸ்டீவன் ஸ்மித் தனது பங்களிப்பை சரியாக அளித்திருப்பார், டேவிட் வார்னருக்கு 50 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், கம்மின்ஸ், ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்திய வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். கணிப்பில் சொன்னது போல, ரசிகர்களின் விருப்பத்தின் போல இந்தியாவே வெற்றி பெற்று மகிழ்ச்சியை கொடுக்கட்டுமே! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Astrologer predict, India should won the match against Australia in world cup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->