வேலை தெரியாதவர்கள் செயல்படுவதற்காக அறிக்கை வெளியிடுகிறார்! CM ஸ்டாலினுக்கு குட்டு வைத்த தங்கர் பச்சான்!
Thankar bachan condemn to DMK cm mk Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐயா மருத்துவர் ராமதாசு அவர்கள் மீது வெறுப்பை உணர்ந்திருக்கிறார் என்று, இயக்குனர் தங்கர் பச்சான் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்தி குறிப்பில், ஐயா அவர்கள் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இம்மக்கள் இந்த மண் மொழி இனம் குறித்து மட்டுமே சிந்தித்து செயலாற்றி வருபவர்! அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள் அனைத்துமே உடனடி தீர்க்கப்பட வேண்டிய செயல்படுத்த வேண்டிய சமூகத்தின் தேவை என்பது அதனை படித்தவர்களுக்கு புரியும்.
மருத்துவர் ஐயா அவர்கள் வேலையில்லாமல் அறிக்கைகள் வெளியிடவில்லை. வேலை தெரியாதவர்கள் செயல்படுவதற்காக வெளியிடுகிறார்!
இதுவரை எந்த ஒரு அரசியல் பதவியையும் அனுபவிக்காமல் தனி மனிதனாக இருந்து 6 இட ஒதுக்கீடுகளை இந்திய சமுதாயத்திற்கு பெற்றுத் தந்தவர்!
அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருபவர் அல்ல! அம்பேத்கரின் கொள்கைப்படி இட ஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்!
முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்று தங்கர் பச்சான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
Thankar bachan condemn to DMK cm mk Stalin