இந்தியாவின் சுழல் ஜாலத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா! எளிய இலக்கை எட்டுமா இந்தியா?! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்  மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டி தேர்வு செய்தது. 

ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என கருதி ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துவிட்ட நிலையில், ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்ததையடுத்து, பேட்டிங் கடினமாக இருந்தது.  தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமலே வெளியேற, டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஓரளவு கௌரவமான இலக்கை நோக்கி செல்ல வழிவகுத்தனர். 

டேவிட் வார்னர் 41 ரன்களிலும் ஸ்டிவன் ஸ்மித் 46  ரன்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய  ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், குல்திப் யாதவ், ஜஸ்டின் பும்ரா தலா இரண்டு விக்கெட்களையும், முகமது சிராஜ், ஹார்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

மிகச் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 2 மெய்டன்களுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 28 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஜடேஜா ஸ்டீவன் ஸ்மித், லபூஷனே, அலெக்ஸ் காரே ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு வித்திட்டார். இறுதி நேரத்தில் கேப்டன் கம்மின்ஸ் 15 ரன்கள், மிச்சேல் ஸ்டார்க் 28 ரன்கள் அடித்து அணியை 199 என்ற ஒரு கௌரவமான ரன்களை எடுக்க வைத்தனர். 

அதிரடியாக பேட்டிங் ஆடும் ஆடுகளமாக இருக்கும் அதிரடியாக ஆடலாம் என நினைத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு மொத்தமே 16 பவுண்டரிகள் தான் அடிக்க முடிந்தது. இரண்டு சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது ஏமாற்றமாக இருந்திருக்கும். மேலும் 49.3 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை எடுக்க உதிரி வகையில் 12 ரன்கள் கொடுத்ததும் அந்த அணிக்கு உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia all out for 199 runs against india in chepauk at worldcup 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->