மிக மோசமான சாதனை! 3 பேரும் - 115, 113, 133 ரன்களும்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வார்னர், மேக்ஸ்வெல் சதத்தால் 399 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து 90 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அணி பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சத்தம் அடித்த வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.

மேலும் இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடு உலககோப்பை போட்டிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மோசமான ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். 

ஆம், இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி, 115 ரன்கள் விட்டுக்கொடுத்து, மோசமான பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மைக் லீவிஸ் என்பவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 10 ஓவரில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்து உள்ளார்.

ஆடம் ஜாம்பாவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 113 ரன்களை விட்டுக் கொடுத்து உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bas de Leede World Cup 2023 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->