ரத்தப் புற்றுநோயுடன் போராடி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரருக்கு நிதியுதவி - கபில் தேவ் கோரிக்கையை நிறைவேற்றிய பிசிசிஐ ..!! - Seithipunal
Seithipunal



இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1974ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை விளையாடிய வீரர் அன்ஷுமான் கெய்க்வாட். இவர் இந்தியாவிற்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 1985 ரன்கள் எடுத்துள்ளதோடு, 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். 

மேலும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 ரன்கள் எடுத்துள்ளதோடு, ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து இவர், 1990ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது இவரது வழிகாட்டுதலில் தான் இந்திய அணி கொக்க கோலா டிராபியைக் கைப்பற்றியது.

இதையடுத்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய அன்ஷுமான் கெய்க்வாட், பின்னாட்களில் பிசிசிஐ நிர்வாகத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது இவருக்கு 71 வயதாகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அன்ஷுமான் கெய்க்வாட், தற்போது ரத்தப் புற்றுநோயுடன் போராடி வருகிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், " நான் அன்ஷுவுடன் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவரை இப்படி ஒரு நிலையில் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. அவர் இந்திய அணிக்காக விளையாடியபோது பலமுறை அவரது மார்பிலும், முகத்திலும் நாட்டிற்காக அடி வாங்கியுள்ளார். 

நான் எனது பென்சன் தொகையை அன்ஷுவிற்காக கொடுக்கிறேன். மற்ற வீரர்களும் விரும்பினால் கொடுக்கலாம். நான் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. பிசிசிஐ முன்னாள் வீரர்களுக்காக ஒரு அறக்கட்டளை அமைத்து உதவினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து தற்போது பிசிசிஐ அன்ஷுமான் கெய்க்வாட்டிற்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI Donated Former Indian Cricketer Who is Battling With Blood Cancer As Per Kapil Dev Request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->