இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தமிழக வீரர் - உச்சி குளிர்ந்த பிசிசிஐ!
BCCI Indian Cricket Team Coach WV Raman info
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி ராமன் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி20 உலக கோப்பை உலகக் கோப்பையை வென்ற கையோடு இந்திய கிரிக்கெட் அணையின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிவுக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளை பிசிசிஐ மும்மரமா செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கான தேர்வில் டபிள்யு.வி ராமன் முன்னிலை பெற்று உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ நடத்திய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வில் டபிள்யு.வி ராமன் அளித்த எதிர்கால திட்டம் பிசிசிஐ நிர்வாகிகளை அதிகமாக கவர்ந்து உள்ளதாகவும், இதன் காரணமாக அவர் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக முன்னாள் எம்பியுமான கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது டபிள்யு.வி ராமன் பெயர் அடிபடுகிறது.
இன்னும் ஒரு சில தினங்களில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், " டி20 உலகக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது ஒட்டுமொத்த நாடும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரோஹித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு எண் வாழ்த்துக்கள்.
இந்த உலகக் கோப்பை வெற்றியுடன் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெரும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் முடிவு சிறந்த முடிவு. இந்திய கிரிக்கெட் அணிக்காக இருவரும் நிறைய செய்திருக்கிறார்கள்.
சிறந்த வீரர்களான அவர்கள் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்தில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BCCI Indian Cricket Team Coach WV Raman info