முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்ரிடிக்கு தக்க பதிலடி கொடுத்த .. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.

இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவுகளை பொறுத்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்ககா ஆகிய மூன்று அணிகளுக்கும் நாளை வெவ்வேறு அணிகளுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், இந்திய அணி கடந்த நவம்பர் 2ம் தேதி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் மழை காரணமாக 4 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி இந்திய அணிக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் அப்ரிடியின் கருத்துக்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'அப்ரிடி கூறும் குற்றச்சாட்டு சரியானது கிடையாது. ஐசிசி எந்த அணிக்கும் சாதகமாக செயல்படுவதாக நான் கருதவில்லை. அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியாகத்தான் ஐசிசி நடத்துகிறது. நீங்கள் சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மற்ற அணிகளை விட இந்திய அணிக்கு சாதகமாக என்ன கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். கிரிக்கெட் உலகில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆனால் நாங்கள் சமமாக தான் நடத்துகிறோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI president Roger Binny reply to Shahid Afridi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->