பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்ற ஜிரி லெஹெக்கா; அரினா சபலென்கா..!
Brisbane International Tennis championship Jiri Lehecka & Aryna Sabalenka
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக தரவரிசையில் 293-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவுடன், ஜிரி லெஹெக்கா மோதினார்.
இந்த போட்டியில் லெஹாக்கா 04-01 என்ற கணக்கில் முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரைய்லி ஒபெல்கா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜிரி லெஹெக்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
அத்துடன், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெடோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 04-06 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்கா இழந்திருந்தார்.
ஆனால், அடுத்து சுத்தகரித்துக்கொண்ட சபலென்கா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்த இரு செட்களை 06-03, 06-02 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம் 04-06, 06-03, 06-02 என்ற செட் கணக்கில் போலினா குடெர்மெடோவாவை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
English Summary
Brisbane International Tennis championship Jiri Lehecka & Aryna Sabalenka