4வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு? அணிக்கு திரும்பும் முக்கிய வீரர்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலக கூடும் என தகவல் வெளியாகி உள்ளன. அதே வேளையில் இருந்து காயத்திலிருந்து மீண்டு உடல் தகுதி பெற்றுள்ள கே.எல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த டெஸ்ட் தற்போது வரை 17 விக்கெட்களை வீழ்த்தி இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் பும்ரா.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் ஆட்டங்களில் 80.5 ஓவர்களை வீசியுள்ள பும்ராவுக்கு ஏற்ப்பட்டுள்ள பணி சுமையை கருத்தில் கொண்டு ராஞ்சியில் நடைபெறும் 4வது‌ டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் பும்ராவுக்கு ஓய்வு கிடைக்குமா? அவருக்கு பதில் கே.எல் ராகுல் அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bumrah rest in 4th test match against England


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->