பும்ரா இந்த போட்டிகளில் இருந்து விலக வேண்டும்..பாக். முன்னாள் வீரர் கருத்து!
Bumrah should be out of this tournament Pak Ex-player comment
பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என பாகிஸ்தன் முன்னாள் வீரர் சோயப் அக்தர் மறைமுகமாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டிகளில் வேக பந்துவீச்சாளர் பும்ரா கலக்கிவருகிறார்.இந்தநிலையில் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என பாகிஸ்தன் முன்னாள் வீரர் சோயப் அக்தர் மறைமுகமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில், நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் உங்களைத் தாக்க முயற்சிப்பதில்லை. எனவே, லென்த் மட்டுமே போதாது. பந்து சீம் ஆகவில்லை என்றால் நீங்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறுவீர்கள். நீங்கள் தடுமாறத் தொடங்கியதும், அணி நிர்வாகம் கேள்வி கேட்கத் தொடங்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்களை வீழ்த்தும் அளவுக்கு அவர் போதுமான நல்ல வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அதிக விக்கெட் வீழ்த்தவில்லை. சில சமயம் அது போல நடக்கும். ஆனால், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர விரும்பினால், அவர் தனது பந்து வீசும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்கும் முயற்சியால், அவருக்கு காயம் ஏற்படும் அபாயம் அதிகம்.
நான் ஜஸ்ப்ரீத் பும்ராவாக இருந்தால், குறைந்த ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். குறுகிய வடிவ போட்டிகளில் பும்ரா மிகவும் நல்ல வேகப்பந்து வீச்சாளர். அவர் லைன் மற்றும் லென்தைப் புரிந்துகொள்கிறார். அவரது துல்லியம் அற்புதமானது. டெத் ஓவர்களில், பவர் பிளே-வில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Bumrah should be out of this tournament Pak Ex-player comment