சாம்பியன்ஸ் டிராபி 2025: விராட் கோலிக்கு வரலாற்று சாதனை செய்வதற்கான வாய்ப்பு!
Champions Trophy 2025 Virat Kohli chance to make history
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு மிகப்பெரிய சாதனை செய்ய வாய்ப்புள்ளார். இதுவரை நடந்த 8 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் 791 ரன்கள் குவித்துள்ளார்.
இந்திய அணியில் இருந்து அதிக ரன்கள் எடுத்த வீரராக ஷிகர் தவான் (701 ரன்கள்) இருக்கிறார். தற்போது விராட் கோலி 13 போட்டிகளில் 529 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் சேர்த்தால், அவர் கெயிலின் சாதனையை முறியடித்து சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக வரலாறு படைக்கலாம்.
இந்த சாதனையை மேற்கொள்ள விராட் கோலிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இதுவே அவரது கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடராக இருக்கலாம். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 489 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால், அவரால் இந்த சாதனையை எட்ட முடியாது.
இந்த தொடரில் விராட் கோலி எப்படி விளையாடப் போகிறார் என்பதே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது!
English Summary
Champions Trophy 2025 Virat Kohli chance to make history