ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன முக்கிய வீரர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.!! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளங்கிய கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

கிறிஸ் மோரிஸ் 2012ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தென்ஆப்பிரிக்கா அணிக்காக நான்கு டெஸ்ட், 42 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக மிகப்பெரிய அளவில் விளையாடா விட்டாலும், அவரது கடைசி கட்ட ஆட்டம் அதிரடியான பேட்டிங்கும், வேகப்பந்து வீச்சும் ஐபிஎல் அணியை வெகுவாக கவர்ந்தது. இதனால், 2020 ஆம் ஆண்டு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 10 கோடிக்கு வாங்கப்பட்டார். 

2021ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது 16.5 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவர்தான். இந்நிலையில், கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chris Morris retirement for all cricket match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->