சிஎஸ்கே-வின் முக்கிய வீரர் இந்த ஆண்டு ஆடமாட்டார்., வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபத் சாகருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இந்தாண்டு ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபக் சாகர் கடைசியாக விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரு அரை சதங்கள் அடித்து தன் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். ஐபிஎல் ஏலத்தில் தீபக் சாகரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அணிக்காக களம் இறங்கியவர், தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மொத்தமாக அவர் 57 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இதில் 42 விக்கெட்டுகள் பவர் பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஒரு வீரராக திகழ்ந்து வருகிறார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தின்போது தீபக் சாகர் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவரின் காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK DEEPAK CHAGAR REST


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->