#IPL2023 : ரெய்னா இல்லாமல் முதன் முறையாக ப்ளேஆஃப் சுற்றில் CSK அணி.!
CSK team without Raina in playoffs
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் குவாலியர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில், மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இல்லாமல் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆப் சுற்று போட்டியில் விளையாட உள்ளது.
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடிய குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 ஆகிய 3 ப்ளேஆப் சுற்று போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்த்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 61 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 43 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 70 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
CSK team without Raina in playoffs