நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டின் கடைசி  கிராண்ட்ஸ்லாம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில்,  பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி ஓபன் டென்னிஸ் வீராங்கனை சபலென்கா, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  


அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில்,  நடப்பு ஆண்டின் கடைசி 'கிராண்ட்ஸ்லாம்' ஆன அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி ஓபன் டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்சுடன்  மோதினார். தொடர்ந்து  இந்த சுற்றில்  ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில், எலிஸ் மெர்டென்சுவை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் முன்னணி ஓபன் டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் கின்வென் ஜெங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Current US Open Tennis Sabalenka advanced to the quarter finals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->