காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி : கலப்பு இரட்டையரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது தொடக்க பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்றைய முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது தொடக்க பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் போட்டியில் பி சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேசமயம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியும் வெற்றி பெற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CWG mixed badminton india beat Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->