காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி.. இந்தியாவுக்கு முதல் தங்கம் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு.!
CWG weight lifting meerabai chanu won gold medal
காமல்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில் காமல்வெல்த் போட்டியின் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு.
காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.
முன்னதாக ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார். 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
அடுத்தபடியாக ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி கலந்துகொண்டார். அவர் மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.
English Summary
CWG weight lifting meerabai chanu won gold medal