உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்து - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் போட்டி  இனி வரும் காலங்களில், பணக்கார உரிமையாளர்களால் நடத்தப்படும் டி20 ஆட்டமாக மாறிவிடலாம் என்று, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் எச்சரித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும்  உள்ளூர் டி20 தொடருக்கு  உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.இதேபோல்,  ஐ.பி.எல். தொடரில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் தற்போது பன்மடங்கு வளர்ந்துள்ளனர்.

இதனால் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அமீரகம் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில், ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்கள் தங்களுடைய கிளை அணிகளை வாங்கியுள்ளனர்.இந்நிலையில்  ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களை வளரவிட்டால், வருங்காலங்களில் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட டி20 கிரிக்கெட்டில் விளையாட அதிகம் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் எச்சரித்துள்ளார்.

எனவே வெளிநாட்டு வாரியங்கள் இதை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லையெனில் வருங்காலத்தில் இந்த விளையாட்டு முழுக்க முழுக்க பணக்கார உரிமையாளர்களால் நடத்தப்படும் டி20 ஆட்டமாக மாறிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Danger to world cricket ex Australian player warns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->