ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பின்னடைவு.. அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

ஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தூரில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே அவர் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது. அவ்வாறு திரும்பாவிட்டால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா வீரர்கள் தொடர்ச்சியாக வெளியேறுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

David Warner ruled out of test series against India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->