வரலாற்று சாதனை படைத்த ஐதராபாத் - 6 ஓவரில் 125 குவிப்பு.! - Seithipunal
Seithipunal


17 வது ஐ.பி.எல். தொடரில் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. 

இதனால், ஐதராபாத் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இரு வீரர்களும் பவுண்டரிகள், சிக்சர்களாக தெறிக்கவிட்டனர். முதல் 6 ஓவர்களுக்கு ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்த நிலையில், 6.2 ஓவரில் ஐதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்துள்ளது. 

தற்போது, ஹெட் 84 ரன்களுடனும், மார்க்ரம் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஐ.பி.எல். வரலாற்றில் பவர்பிளேயில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற வரலாற்று சாதனையை ஐதராபாத் அணி நிகழ்த்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi hydrabad ipl match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->