முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி! வருத்தத்தில் ஷிகர் தவான்!!
Dhawan Press Meet for IND vs WI First ODI
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பமே அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் துரதிஷ்டம் விதமாக ரன் அவுட் ஆனார். சுப்மன் கில் 53 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், அதிரடியாக விளையாடிய 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கைல் மேயர்ஸ் 75 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்னிலும், பிராண்டன் கிங் 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பூரன் 25 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன் மட்டுமே எடுத்தது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது, எனக்கு இந்த போட்டியில் வென்றது சந்தோசம் தான். ஆனால், நான் சதம் அடிக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும் பரவாயில்லை அணியின் பங்களிப்பு தான் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
இறுதியில் கொஞ்சம் பயம் இருந்தது, ஆனால் போட்டி அப்படியே தலைகீழாக மாறியதுதான் உண்மை. எப்போதுமே ஒரு போட்டி எப்படி செல்கிறதோ அதற்கு ஏற்ற விளையாடுவது தான் முக்கியமான ஒன்று என தெரிவித்துள்ளார்.
English Summary
Dhawan Press Meet for IND vs WI First ODI