அர்ஜுனா விருது பெறும் வைஷாலி, முகமது சமி உள்ளிட்ட வீரர்களுக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


அண்மையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்து உள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரர் முகமது சமி,  கபாடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்து உள்ளது.

இறகுபந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி  ஆகியோருக்கு தயான்சந்த் கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அர்ஜுனா விருது பெறும் வைஷாலி, முகமது சமி  உள்ளிட்ட வீரர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் வாழ்த்துச் செய்தியில், "விளையாட்டுத்துறையில் சாதனை படைத்ததற்காக  அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ள  தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி,  கபாடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கும்,  தயான்சந்த் கேல்ரத்னா விருத்துக்கு தேர்வாகியுள்ள இறகுபந்தாட்ட  வீரர்கள்  சிராக் ஷெட்டி,  சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி  ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த பயிற்சியாளருக்கான  துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், சிறந்த பயிற்சியாளர்களில் வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள கபாடி பயிற்சியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். விளையாட்டுத்துறையில்  இவர்கள் மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகள்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish to Arjuna Award Vaishali


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->