ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவிப்பு.. உலக சாதனை படைத்த இங்கிலாந்து அணி.! - Seithipunal
Seithipunal


நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற  ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 162 ரன்களும், டேவிட் மலன் 125 ரன்களும், பிலிப் சால்ட் 122 ரன்களும், லிவிங்ஸ்டன் 66 ரன்களும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 232 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வரலாற்று சாதனை படைத்தது இங்கிலாந்து அணி. கடந்த 2018ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 481 ரன்கள் அடித்த தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது இங்கிலாந்து அணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England get Highest run score in oneday international


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->