மலைக்க வைக்கும் உலககோப்பை கால்பந்து போட்டியின் பரிசுத்தொகை.. முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றனர். 2022 பிஃபா உலகக்கோப்பை போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கால்பந்து உலகக்கோப்பைக்கான மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த 2018 உலக்கோப்பையை விட ரூ.328 கோடி கூடுதலாகும். 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடி. 

தற்போது நடைபெற உள்ள கால்பந்து உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக வழங்கப்படும்.

2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ.244 கோடி.

 3ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.219 கோடி வழங்கப்படும்.

 4ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.203 கோடி வழங்கப்படும்.

காலிறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடி வழங்கப்படும்.

2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடி வழங்கப்படும்.

லீக் சுற்றுடன் வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடி பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIFA World Cup 2022 prize amounts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->