சொந்த குடும்பத்தில் எடுத்த முதல் சாதனையா!!! சதத்தை வென்ற பென் கரண்....
First achievement in own family Ben Karan hits century
ஜிம்பாப்வே நாட்டில் அயர்லாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளது. இதை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது.

போட்டி:
இதில் ,முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டியின் முடிவில் அயர்லாந்து அணி மற்றும் ஜிம்பாப்வே அணியானதுதலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து ,இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தன.
பென் கரண்:
அதன்பின் ,இலங்கைக்கு எதிராக விளையாடிய ஜிம்பாப்வே அணி இலக்கை எட்டியது. இதில் ,2-1 என்ற கணக்கில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வென்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்தார்ப் பென் கரண். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
முதல் வீரர்:
பென் கரணின் சகோதரர்களான டாம் கரண் ,சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பென் கரண் குடும்பத்தில் முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் பென் கரண் படைத்துள்ளார்.
English Summary
First achievement in own family Ben Karan hits century