தவறி விழுந்து உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்.!! சோகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தவறி விழுந்து உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்.!! சோகத்தில் ரசிகர்கள்.!

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்த வயலட்டா மிதுல், அந்நாட்டின் தேசிய அணிக்காகவும், ஐஸ்லாந்து நாட்டின் கிளப் கால்பந்து அணிக்காகவும் விளையாடி வந்தார். இதுவரைக்கும் நாற்பது சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.

இந்த நிலையில், வயலட்டா மிதுல் கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் தேதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் ஐஸ்லாந்தில் உள்ள வாப்னாப்யூர் என்ற மலைத்தொடரில், மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். 

வயலட்டா மிதுலின் இறப்பை அறிந்த ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மால்டோவா கால்பந்து அணி நிர்வாகம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foot ball player violeta mitul died accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->