என்ன ஆச்சு வினோத் காம்ப்ளிக்கு ..?! நடக்க முடியாத நிலையில் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்படும் பரிதாபம்.. வேதனையில் கிரிக்கெட் ரசிகர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி. இவர் கடந்த 1990 களில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பல்வேறு போட்டிகளில் அதிரடி காட்டியுள்ளார். மேலும் அதிரடியான இடது கை பேட்ஸ்மேனாக இரண்டு இரட்டை சதங்களையும் அடித்துள்ளார்.

1993ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியில் வினோத் காம்ப்ளியின் பங்கு முக்கியமானது. இதையடுத்து 1996ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் ஈடன் கார்டன் மைதானத்தில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி, தோல்வியைத் தழுவியபோது, மைதானத்தை விட்டு வினோத் காம்ப்ளி அழுது கொண்டே வெளியேறியதும், ரசிகர்கள் மைதானத்தில் புகுந்து ரகளை செய்ததும் இப்போதும் மறக்க முடியாத நினைவு. 

அப்போது வினோத் காம்ப்ளி கேப்டன் அஸாருதீனை கடுமையாக சாடியதாக செய்திகள் வெளியாகின.  அதற்குப் பிறகு பல்வேறு தனிப்பட்ட நடத்தைகள், காயங்கள் என்று முழுமையாகவே ஒரு திறமையான சர்வதேச வீரராக பரிணமித்திருக்க வேண்டிய ஒரு வீரரை எதற்கும் இல்லாமல் அழித்து விட்டன. 

இந்நிலையில் தான் தற்போது வினோத் காம்ப்ளி நிற்க கூட முடியாமல், கால்கள் வளைந்து வலுவிழந்து, மற்றவர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு சச்சின் டெண்டுல்கர் உதவ வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் பள்ளித் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Formar Indian Cricketer Vinod Kambli Not Able To Walk Wihtout Support


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->