இந்திய அணியில் இவரை எடுக்காமல்.. 3 ஸ்பின்னர்கள் எதற்கு? - முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்.! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலக கோப்பை இன்று தொடங்கி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் இந்திய அணி உலக கோப்பையில் வெற்றி பெற இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், 'ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்கள் பெரியது. அதே அளவில் பவுன்ஸ் இருக்கும். மைதானம் பெரியதாக இருப்பதால் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும். ஆனால் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்திருப்பது கொஞ்சம் அதிகம். மேலும் விளையாடும் 11 வீரர்களில் ஒரு ஸ்பின்னரை மட்டுமே விளையாட வைக்க முடியும். 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்ததற்கு பதிலாக இளம் வேகுப்பந்து பேச்சாளர் உம்ரான் மாலிக் எடுத்திருந்தால் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Indian team bowling coach speech about Indian team bowling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->