விராட் கோலி ஃபார்ம் குறித்து கங்குலி பரபரப்பு பேட்டி.!
Ganguly sensational interview about Virat Kohlis form
2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் அவரை பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். அவரது ஃபார்ம் ஆசிய கோப்பை, உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்ததாவது,
"விராட் பயிற்சி செய்யட்டும், போட்டிகளில் விளையாடட்டும். அவர் ஒரு பெரிய வீரர், நிறைய ரன்கள் எடுத்துள்ளார். அவர் மீண்டும் பார்முக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அவரால் சதம் அடிக்க முடியவில்லை, ஆசிய கோப்பையில் அவர் தனது பார்மை கண்டுபிடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணி வருகிற 28 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ganguly sensational interview about Virat Kohlis form