தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கெளதம் கம்பீர் நீக்கப்படவுள்ளார்..? பிசிசிஐ அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது என்றால் குறித்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, கம்பீரின் பயிற்சியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை முடிவடையாத சூழல் நிலவுகிறது.தற்போது தலைமை பயிற்சியாளர்  பதவிக்கு ஆபத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

T20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். அதன்பின் இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆடியது.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் வெல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் கவுதம் கம்பீரிடம் இருந்து பிசிசிஐ தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அதேபோல் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களில் சிக்கல் எழுந்திருப்பதாக பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில், ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்த போது வீரர்களுக்கு போதுமான தெளிவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அணியின் இளம் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியில் இருந்து ஏன் நீக்கப்படுகிறோம், ஏன் பெஞ்சில் அமர்த்தப்படுகிறோம் என்கிற விளக்கம் கூட அவரால் அளிக்கப்படுவதில்லை  என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஏற்கனவே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு கம்பீரும் மறைமுக காரணமாக அமைந்துள்ளாதக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Gambhir to be removed from the post of head coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->