இறுதிப்போட்டியில் நுழைய போவது யார்.? இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் லக்னோ சூப்பர் லெஜெண்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னேற முதல் அணி எது என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் மணி மேலும் ஒரு வாய்ப்பு உண்டு. அதாவது அந்த அணி வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்கு நுழைய முடியும். 

குஜராத் அணியை பொறுத்தவரை 14 போட்டியில் விளையாடிய 10 போட்டியில் வெற்றி பெற்ற 4 போட்டிகளில் தோல்வியடைந்து 20 புள்ளிகளுடன்  முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ஹார்திக் பாண்டியா, சுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சஹா, ராகுல் திவேதியா உள்ளனர். பந்துவீச்சில் ரஷித் கான், முகமது ஷமி, பெர்குசன், யாஷ் தயாள் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். 

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை 14 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 3 சதம், 3 அரைசதம் உட்பட 629 ரன்கள் எடுத்து, இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல அந்த அணியின் சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 26 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் அணி பேட்டிங்கை பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ஜெய்ஸ்வால் உள்ளனர். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின், ஒபெட் மெக்கா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

 ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் குஜராத் அணி 37 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என ராஜஸ்தான் அணி இன்று போராடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GT vs RR First Qualifying Round Match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->