#IPL2022 : ராஜஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 89 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிதானமாக விளையாடியது. இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans beat rajasthan royals and qualified final


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->