புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடு; போலீசார் நடவடிக்கை..!
police strictly control new year celebrations
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் ஒன்று. இன்னும் ஐந்தே நாட்களில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் உலக முழுவது நடைபெற இருக்கின்றது.
இந்நிலையில், கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதில், இன்னிசை கச்சேரி, சிறப்பு பாடகர்கள் வருகை, பபே உணவு முறை, வாண வேடிக்கை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்த கொண்டிருக்கிறது.
கோவை ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவார்கள். இந்நேரத்தில், இளைஞர்கள் பைக்ரேஸ் செய்வது, பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்வது, போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
தனை தடுக்கும் விதமாக கோவையில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மேம்பாலங்களில் நள்ளிரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கவும் போலீசார் ஆலோசித்து வருவாரா தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் மேம்பாலங்களை குறிவைத்து பைக்ரேஸ் நடத்த வாய்ப்புள்ளதால் இந்த நடவடிகை எடுக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
English Summary
police strictly control new year celebrations