இந்திய அணியின் பயிற்சியாளராக நெஹ்ராவை நியமிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணி குறித்து பேசிய அவர், டி20 போட்டியை நன்கு புரிந்து கொண்ட ஒருவரே பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்னுடைய என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாங்கள் இருவரும் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளோம். அவருக்கு கிரிக்கெட்டில் சிறந்த மூளை உள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் அவர் இல்லை.

ராகுல் டிராவிட்டை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றால் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை அவருக்கு உதவியாக தேர்வு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஆசிஷ் நெஹ்ரா சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். அறிமுக ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக ஹர்டிக் பாண்டியாவை நியமிக்க வேண்டும். அதைவிட சிறந்த தீர்வு யாரும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbhajan Singh speech about Indian team coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->