என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை - வேதனையில் ஹர்திக் பாண்டியா! - Seithipunal
Seithipunal


காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 7 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 1லீக் ஆட்டத்தின்போது, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்தை காலால் தடுக்க முயன்று, கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு கடந்த 2 வாரங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டம் வரை அவர் விளையாடுவது சந்தேகம் என்று உறுதியான நிலையில், தற்போது வெளியான செய்தி இந்திய ரசிகர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அந்த செய்தியில், கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாமல் இருப்பதால், உலகக் கோப்பை தொடரில் இருந்தே ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார் என்பது தான் அந்த செய்தி.

அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆனால், ஹர்திக் இல்லாமல் போனது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இது குறித்து மன வேதனையுடன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய சமுக வலைதள பக்கத்தில், "மீதமுள்ள ஆட்டங்களை நான் மிஸ் செய்வேன் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

ஆனால், அடுத்து நடக்கும் அனைத்து ஆட்டங்களில் ஒவ்வொரு பந்திலும், நம் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன் அணியுடன் இருப்பேன். 

என் மீதான அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. எனக்கு இந்த அணி மிகவும் ஸ்பெஷல். நிச்சயமாக அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Say About icc world cup match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->